இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ராஜினாமா!

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

கும்ப்ளே

இந்திய அணியின் பயிற்சியாளராகக் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். இதையடுத்து இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர் வெற்றிகளைப் பெற்றது. ஆனால், சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் கும்ப்ளேவுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகக் கூறப்பட்டது. மேலும், சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியிலும் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால், கும்ப்ளேவின் பயிற்சி மீது விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாகக் கும்ப்ளே அறிவித்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அனில் கும்ப்ளே அவர்களோடு செல்லவில்லை. ஐசிசி மீட்டிங்கில் அவர் கலந்து கொள்வதாகக் காரணம் சொல்லப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர் வரை அவரைப் பயிற்சியாளராக இருக்க, பி.சி.சி.ஐ வேண்டுகோள் விடுத்திருந்தது.

 ஆனால், ஒப்பந்தத்தின்படி தனது பதவிக்காலம் முடிவதால் அவர் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!