ரொனால்டோவைத் தொடர்ந்து வரி ஏய்ப்புப் புகாரில் சிக்குகிறார் ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் பயிற்சியாளர்

ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் பயிற்சியாளர்மீது சுமார் 5 மில்லியன் டாலர் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. 


ஸ்பெயின் நாட்டின் முக்கியக் கால்பந்து அணியான ரியல் மாட்ரிட் அணியில், 2010 - 2013 வரை பயிற்சியாளராக இருந்தவர் ஜோஸே மொரினியோ. அந்தக் காலகட்டத்தில், இவர் சுமார் 5 மில்லியன் டாலர் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஸ்பெயின் வழக்கறிஞர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். எனினும் இந்தப் புகாரை, ஜோஸே மொரினியோ முழுமையாக மறுத்துள்ளார். இவர், தற்போது இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளராக உள்ளார். கடந்த மாதம், இதே போன்று வரிப் புகாரில் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர், ரியல் மாட்ரிட் அணியை விட்டு விலகும் முடிவில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த மாதம்  பார்சிலோனா அணியின் முன்னணி வீரரான மெஸ்ஸியும் வரிப் புகாரில் சிக்கி, அவருக்கு 21  மாதம் சிறைத்தண்டனை விதித்து ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!