வெளியிடப்பட்ட நேரம்: 18:32 (22/06/2017)

கடைசி தொடர்பு:18:32 (22/06/2017)

இரண்டாவது பெண் குழந்தை... மகிழ்ச்சியில் கம்பீர்!

கிரிக்கெட் வீரர் கம்பீருக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.


Gambhir

கம்பீருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காவிடினும், ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். அதேபோல, சமூகவலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.  குறிப்பாக, பாகிஸ்தானுக்கு தொடர்ந்து பாராட்டு தெரிவித்த காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவருக்கு பதிலடி கொடுத்தது. சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு உதவி என்று கம்பீர் பற்றிய செய்திகளுக்கு பஞ்சமில்லை.

 

இந்நிலையில், கம்பீருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கம்பீர் - நட்டாஷா தம்பதிக்கு கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஏற்கெனவே ஆசின் என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது, இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து கம்பீருக்கு கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்கள் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.