வெளியிடப்பட்ட நேரம்: 05:32 (23/06/2017)

கடைசி தொடர்பு:08:03 (23/06/2017)

உலக ஹாக்கி லீக்: மலேசியாவிடம் வீழ்ந்த இந்தியா

hockey

உலக ஹாக்கி லீக் அரையிறுதிச் சுற்றுக்கான காலிறுதிப் போட்டியில், மலேசியாவிடம் தோல்வி அடைந்துள்ளது இந்தியா. உலக ஹாக்கி லீக் அரையிறுதிச் சுற்றுக்கான போட்டிகள் லண்டனில் நடைபெற்றுவருகின்றன. பத்து அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில், இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. இதில், காலிறுதிப் போட்டியில் மலேசியா - இந்தியா பலப்பரீட்சை செய்தன.

உலகத் தர வரிசைப் பட்டியலில் இந்தியா 6-வது இடத்திலும், மலேசியா 14-வது இடத்திலும் உள்ளன. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியைத் தழுவியது. இந்தியா சார்பில், இரண்டு கோல்களையும் ராமன்தீப் சிங் அடித்தார். பட்டியலின் தர வரிசைக்காகப் பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது இந்தியா.