வெளியிடப்பட்ட நேரம்: 06:37 (23/06/2017)

கடைசி தொடர்பு:08:01 (23/06/2017)

ஒரு வருடத்தில் இப்படி மாறிவிட்டாரே விராட் கோலி? அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகி இருக்கும் 'கும்ப்ளே-வை சிறந்த கிரிக்கெட் வீரராக மதிக்கிறேன். நாங்கள் எல்லோரும் கும்ப்ளே-வின் முடிவை மதிக்கிறோம்' என்று மேற்கிந்தியத் தீவுகளில் போர்ட் ஆஃப் ஸ்பெய்ன் நகரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. 

விராட் கோலி

 கும்ப்ளே எதற்காக பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார்? என்று செய்தியாளர்கள் அழுத்தம்கொடுத்துக் கேட்டபோது, 'டிரெஸ்ஸிங் அறையில் நடக்கும் விஷயங்களைப் பொது வெளியில் பேசுவது நாகரிகமாக இருக்காது. இதை ஒரு கலாசாரமாக கடைபிடித்துவருகிறோம்', என்று சொல்லி மறுத்துவிட்டார் கோலி. 

கும்ப்ளே பதவி விலகியவுடன், 'இந்திய அணியின் கேப்டன், ''நான் தலைமைப் பயிற்சியாளராக இருப்பதை விரும்பவில்லை'' என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பின் நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறார். அவர்களும் எங்களுடைய ஒற்றுமைக்காகப் போராடினார்கள். ஆனால் அது நடக்கவில்லை' என்று வருத்தத்தோடு சொல்லி இருக்கிறார், அனில் கும்ப்ளே. 

விராட் கோலி அனில் கும்ப்ளே

கடந்த ஆண்டு இதே நாளில் (23.06.2016), அனில் கும்ப்ளே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அன்று, விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் அனில் கும்ப்ளேவுக்கு வாழ்த்துச் செய்தியைப் பதிவுசெய்திருந்தார். அதில், இதயம் கனிந்து வரவேற்பதாகவும், உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலோடு காத்திருக்கிறோம் என்றும் பதிவிட்டிருந்தார். நேற்று அந்தப் பதிவை நீக்கியிருக்கிறார் விராட் கோலி. 'ஒரு வருடத்தில் இப்படி மாறிவிட்டாரே விராட் கோலி' என்று அதிர்ச்சியோடு உற்றுநோக்குகிறார்கள், கிரிக்கெட் ரசிகர்கள்.  

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு, மேற்கிந்தியத் தீவு அணிக்கு எதிரான போட்டியின்மூலம் பதில் சொல்வாரா கோலி.