வெளியிடப்பட்ட நேரம்: 12:53 (23/06/2017)

கடைசி தொடர்பு:14:42 (23/06/2017)

ஆஸ்திரேலிய ஓப்பன் பேட்மின்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்

ஆஸ்திரேலிய ஓப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் தொடர், சிட்னியில் நடந்துவருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சக இந்திய வீரர் பிரணீத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் ஸ்ரீகாந்த்.

கடாம்பி ஸ்ரீகாந்த்

சிட்னியில் இன்று நடைபெற்ற போட்டியில், 25-23, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். தொடர்ந்து பல வெற்றிகளைக் குவித்துவரும் ஸ்ரீகாந்த், சர்வதேச பேட்மின்டன் தர வரிசைப் பட்டியலில் 22-ம் இடத்தில் உள்ளார். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம்செலுத்திவந்த ஸ்ரீகாந்த், போட்டியை எளிதாக வென்றார்.

சரிக்குச் சமமாக விளையாடியபோதும், பிரணீத் போட்டியில் தோல்வியடைந்தார். இந்தப் போட்டியில் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்த், சமீபத்தில் இந்தோனேசிய ஓப்பன் பேட்மின்டன் தொடரைக் கைப்பற்றி, தனக்கான புதிய வெற்றிப் பாதையைத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடந்த சுற்றுகளில், பேட்மின்டனின் டாப் தர வரிசை வீரர்களை ஸ்ரீகாந்த் வெற்றிகொண்டார். நம்பர் 1 வீரரான சீனாவின் கான் சாவோ யூ என்பவரை ஸ்ரீகாந்த் வீழ்த்தியது பலராலும் பாராட்டப்பட்டது.