வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (23/06/2017)

கடைசி தொடர்பு:15:00 (23/06/2017)

ஆஸ்திரேலிய ஓப்பன் பேட்மின்டன்: காலிறுதியில் பி.வி. சிந்து தோல்வி

சிட்னி நகரில் நடந்துவரும் ஆஸ்திரேலிய ஓப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் தொடரின் காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து தோல்வியடைந்தார்.


இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், சீன தைபே வீராங்கனை டாய் சூ யிங் -ஐ எதிர்கொண்டார் இந்திய பேட்மின்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து. கடும் போட்டி நிலவிய இந்த காலிறுதியில், சிந்து போராடித் தோல்வியடைந்தார். 10-21 என்று எளிதாக முதல் செட்டை இழந்த சிந்து, இரண்டாம் செட்டில் கடுமையாகப் போராடி 22-20 என்ற கணக்கில் வெற்றிபெற்றார். வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய டாய், 21-16 என்று வெற்றிபெற்று, அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.

இன்று மாலை நடக்கவிருக்கும் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் சாய்னா நேவால், சீன வீராங்கனையை எதிர்கொள்கிறார். முன்னதாக இந்தியாவின் ஸ்ரீகாந்த், காலிறுதியில் வெற்றிபெற்று, அரையிறுதிக்குத் தகுதிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.