வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (23/06/2017)

கடைசி தொடர்பு:17:56 (23/06/2017)

ஆஸ்திரேலிய ஓப்பன் பேட்மின்டன்! காலிறுதியில் சாய்னா நேவால் தோல்வி

சிட்னியில் நடந்த ஆஸ்திரேலிய ஓப்பன் பேட்மின்டன் தொடரின் காலிறுதிப் போட்டியில் சாய்னா தோல்வி அடைந்தார்.


இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் சீன வீராங்கனை  சுன் யு -வை எதிர்கொண்டார் இந்திய வீராங்கனை சாய்னா நேவால். நீயா நானா போட்டி நிலையில் இந்த காலிறுதி ஆட்டத்தில் சாய்னா போராடி தோல்வி அடைந்தார். 17-21 என்று முதல் செட்டை இழந்த சாய்னா, இரண்டாம் செட்டை  21-10  என்ற கணக்கில் கைப்பற்றினார். வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய சுன் யு  21-17 என்று வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். பி.வி.சிந்துவும் இன்று நடந்த காலிறுதியில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்தியாவின் ஸ்ரீகாந்த் காலிறுதியில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.