'நோபால்'விளம்பரம்... பும்ராவின் ரியாக்‌ஷன் இதுதான்!

இறுதிப்போட்டியில் நோ-பால் வீசியதை சாலை பாதுகாப்பு விழிப்புஉணர்வுக்குப் பயன்படுத்திய ஜெய்ப்பூர் காவல்துறையின் செயலுக்கு பும்ரா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பும்ரா நோ பால்

மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையைத் தட்டிச்சென்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஜமான் சதமடித்து வெற்றிக்கு வழிவகுத்தது ஒருபுறமிருக்க, இவர் 3 ரன்கள் எடுத்திருந்தபோதே பும்ரா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால், அது நோபால் என அறிவிக்கப்பட்டது. இதனால், நோபால் வீசிய பும்ரா சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கப்பட்டார்.

இதனிடையே, பும்ரா நோபால் வீசியதையும், சாலையில் எல்லைக் கோட்டைத் தாண்டக்கூடாது என்பதையும் இணைத்து, ஜெய்ப்பூரில் சாலை பாதுகாப்பு பேனர் வைக்கப்பட்டது. இந்த வித்தியாசமான விழிப்புஉணர்வு சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், ஜெய்ப்பூர் காவல்துறையினரின் செயலுக்கு பும்ரா ட்விட்டரில் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'நாட்டுக்காக சிறந்ததை வழங்கிய பின்னர், உங்களுக்கு எவ்வளவு மரியாதை கிடைக்கும் என்பதை இது காட்டுகிறது. அதை ஜெய்ப்பூர் காவல்துறை நன்றாகச் செய்துள்ளது. ஆனால், உங்களது வேலையில் நீங்கள் தவறு செய்தால் அதை நான் கேலி செய்ய மாட்டேன். ஏனென்றால் மனிதர்கள் அனைவருமே தவறு செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்' எனக் கூறியுள்ளார்.

bumrah

ஆனால், பிறகு அந்த ட்வீட்களை பும்ரா டெலிட் செய்து விட்டார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!