வெளியிடப்பட்ட நேரம்: 10:27 (24/06/2017)

கடைசி தொடர்பு:10:27 (24/06/2017)

ஆஸ்திரேலிய ஒப்பன் அரையிறுதிப் போட்டியில் ஸ்ரீகாந்த்!

ஆஸ்திரேலிய ஓப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் தொடர், சிட்னியில் நடந்துவருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதியில் சீனாவின் ஷி யூகி வை எதிர்கொண்டார் இந்தியாவின் ஸ்ரீகாந்த்.


போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்ரீகாந்த், முதல் செட்டை 21-10 என்ற புள்ளிகளில் கைப்பற்றினார். இரண்டாம் செட்டிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஸ்ரீகாந்த், 21-14 என்ற புள்ளிகளில்  வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதிப் போட்டி நாளை நடைபெறுகிறது.
தொடர்ச்சியாக பல வெற்றிகளை குவித்து வரும் ஸ்ரீகாந்த், தொடர்ந்து மூன்றாவது முறையாக  சூப்பர் சீரிஸ் போட்டிகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறுகிறார். இதற்கு முன்னதாக சிங்கப்பூர் ஒப்பன் மற்றும் இந்தோனேசிய ஒப்பன் தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார். இதில் இந்தோனேசிய ஒப்பன் தொடரை கைப்பற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.