வெளியிடப்பட்ட நேரம்: 22:05 (24/06/2017)

கடைசி தொடர்பு:22:05 (24/06/2017)

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்கியது. தொடக்கப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான புனம் ராவுத், ஸ்மிரிதி மந்தனா சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். 

Indian Women Cricket team


ஸ்மிரிதி 90 ரன்களும், புனம் 86 ரன்களும் எடுத்தனர். அடுத்த களமிறங்கிய கேப்டன் மித்தாலி ராஜ் தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். மித்தாலி ராஜ் 71 ரன்கள் குவிக்க, 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. குறிப்பாக, இந்தப் போட்டியில் ரன் மிஷின் மித்தாலி ராஜ் பல்வேறு சாதனைகளைப் படைத்தார்.


இதையடுத்து, 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் கேப்டன் நைட், வில்சன் ஆகிய இருவரைத் தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 47.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.


இங்கிலாந்து அணியில் வில்சன் 81 ரன்களும், நைட் 46 ரன்களும் எடுத்தனர். இந்திய அணித் தரப்பில் தீப்தி ஷர்மா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.