வெளியிடப்பட்ட நேரம்: 15:12 (25/06/2017)

கடைசி தொடர்பு:09:02 (26/06/2017)

உளான்பாத்தர் குத்துச்சண்டை: தங்கம் வென்றது இந்தியா!

உளான்பாத்தர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வென்று அசத்தியிருக்கிறார் அன்குஷ் தாஹியா.

குத்துச்சண்டை 

உளான்பாத்தர் குத்துச்சண்டைப் போட்டிகள் மங்கோலியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில் இந்தியாவின் அன்குஷ் தாஹியா தங்கப்பதக்கம் வென்றார். 60 கிலோ எடைப் பிரிவில் பங்குபெற்ற அன்குஷ் தாஹியா கொரிய வீரர் சோய் சோல் என்பவரை வீழ்த்தி பதக்கத்தைக் கைப்பற்றினார்.

மங்கோலியா நாட்டில் நடைபெற்று வரும் இந்தக் குத்துச்சண்டைப் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்தியாவைச் சேர்ந்த 10 வீரர், வீராங்கனைகள் பங்குபெற்று வருகின்றனர். இப்போட்டியில் பெண்கள் பிரிவில் ஒலிம்பிக் நாயகி மேரி கோம் பங்குபெற்று முன்னேற்றம் பெற்று வருகிறார்.