வெளியிடப்பட்ட நேரம்: 00:19 (26/06/2017)

கடைசி தொடர்பு:08:05 (26/06/2017)

ரஹானே, கோலி அதிரடி... 310 ரன்கள் குவித்தது இந்தியா!

இன்று, மேற்கிந்தியத்தீவுகளுடன் நடந்த ஒருநாள் போட்டியில், இந்திய அணி 310 ரன்கள் குவித்துள்ளது.

ஷிகர் தவான்

மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், பாகிஸ்தானிடம் கோப்பையை நழுவவிட்ட இந்திய அணி, தற்போது மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 5 ஒருநாள் போட்டிகள், 1 டி-20 போட்டியில் இந்தியா விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது. இந்த நிலையில், 2-வது ஒருநாள் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

டாஸ் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் கேப்டன் ஹோல்டர், பந்துவீச்சை தேர்வுசெய்தார். ஆனால் மழை பெய்ததால், போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 43 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 103 ரன்கள் குவித்தார். கேப்டன் விராட் கோலி 87 ரன்களும், ஷிகர் தவான் 63 ரன்களும் குவித்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜோசப் 2 விக்கெட்டுகளும், ஹோல்டர், நர்ஸ், கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இதையடுத்து 311 ரன்களை இலக்காகக்கொண்டு களமிறங்குகிறது மேற்கிந்தியத்தீவுகள்.