மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது இந்தியா...ரஹானே, குல்தீப் யாதவ் அசத்தல்!

இன்று, மேற்கிந்தியத் தீவுகளுடன் நடந்த ஒருநாள் போட்டியை, 105 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது, இந்திய அணி. 

இந்தியா

மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், பாகிஸ்தானிடம் கோப்பையை நழுவவிட்ட இந்திய அணி, தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 5 ஒருநாள் போட்டிகள், 1 டி-20 போட்டியில் இந்தியா விளையாடுகிறது. முதல் ஒரு-நாள் போட்டி, மழை காரணமாகக் கைவிடப்பட்டது. இந்த நிலையில், 2-வது ஒருநாள் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

முதலில் ஆடிய இந்திய அணி, 43 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 103 ரன்களும் கோலி 87 ரன்களும் குவித்தனர். இதையடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 43 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஹொப் 81 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். அஷ்வின் 1 விக்கெட் வீழ்த்தினார். சதமடித்த ரஹானே, ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 30-ம் தேதி, அடுத்த 3-வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!