நோபால் விவகாரம்; பும்ராவை சீண்டும் பாகிஸ்தான் காவல்துறை..!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவைக் கலாய்க்கும் விதமாக பாகிஸ்தான் காவல்துறையினர் போக்குவரத்து விழிப்புஉணர்வு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


பாகிஸ்தான் அணிக்கெதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்டத்தில் தொடக்கத்தில் பும்ரா வீசிய பாலில் பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஜமன் ஆட்டமிழந்தார். ஆனால், நடுவர் அதனை நோபால் என அறிவித்தார். விக்கெட் இழப்பிலிருந்து மீண்ட ஃபகர் ஜமன் அதிரடியாக ஆடி சதமடித்தார். இந்திய அணியின் தோல்விக்கு  இது முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது பாகிஸ்தான் நாட்டு காவல்துறையினர், பும்ரா நோபால் வீசும் புகைப்படத்தையும், சாலையில் கார்கள் கோட்டுக்கு அருகில் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

அந்த புகைப்படத்தில் கோட்டினை தாண்டாதீர்கள், அதன் விலை அதிகமாக இருக்கலாம் என்று வரிகளையும் பயன்படுத்தியுள்ளனர். ஏற்கெனவே இதேபோல ஜெய்ப்பூர் மாவட்ட காவல்துறையினரும், இதேப்போல பும்ராவின் புகைப்படத்தை பயன்படுத்தியிருந்தனர். ஜெய்ப்பூர் காவல்துறையினரின் அந்தச் செயலுக்கு பும்ரா கண்டனம் தெரிவித்திருந்தநிலையில், தற்போது பாகிஸ்தான் காவல்துறையும் அதே செயலை செய்துள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!