ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்தது இந்தியா!

இந்திய அணி, தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து, 5 ஒருநாள் போட்டிகள், 1 டி-20 போட்டியில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி, மழை காரணமாகக் கைவிடப்பட்டது. இந்த நிலையில், 2-வது ஒருநாள் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது. 

Indian Cricket team


முதலில் விளையாடிய இந்திய அணி, 43 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 43 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அதன்படி, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை
300 ரன்களுக்கு மேல் எடுத்த ஆஸ்திரேலிய அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி 96 முறை 300 ரன்களைக் (நேற்றைய 300 உள்பட) கடந்துள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலிய அணி
95 முறை 300 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்திய அணி, கடந்த 1996-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக 300 ரன்களைக் கடந்தது. தென் ஆப்பிரிக்க அணி 77 முறையும், பாகிஸ்தான் அணி 69 முறையும் 300 ரன்களைக் கடந்துள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!