பும்ரா வீசிய நோ-பால் தருணம்: பாகிஸ்தான் பேட்ஸ்மேனின் ரியாக்‌ஷன் இதுதான்!

சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில், இந்திய அணிக்கு அதிர்ச்சிகொடுத்து, பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. இந்தியா தோல்வியடைந்ததால், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். சமூக வலைதளங்களில் இது குறித்து தொடர்ந்து பேசப்பட்டுவருகிறது. குறிப்பாக, பும்ரா வீசிய நோ-பால், மீம்ஸ்களாக சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. ராஜஸ்தானில், பும்ரா வீசிய நோ-பால் படம், போக்குவரத்து விழிப்புஉணர்வுக்காகப் பயன்படுத்தப்பட்டது. 

Fakhar Zaman


இதற்கு, பும்ரா வருத்தம் தெரிவித்திருந்தார். பும்ராவின் நோ - பாலில் தப்பிப் பிழைத்த ஃபகார் ஜமான், பிறகு சதமடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இதெல்லாம் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், பும்ரா வீசிய நோ-பால் தருணம் குறித்து, ஃபகார் மனம் திறந்துள்ளார்.

இதுகுறித்து ஃபகார், "பும்ரா அவுட் ஆனவுடன் என் இதயம் நொறுங்கிவிட்டது. அதிர்ச்சியடைந்த நான், பெவிலியனுக்குத் திரும்பத் தயாரானேன். எனது நம்பிக்கைகள், கனவுகள் அனைத்தும் வீணானது என நினைத்தேன். குறிப்பாக, 'இந்த முக்கியமான போட்டியில், எப்படி நான் அவுட் ஆகலாம்? நான் பெரிதாகச் சாதித்திருக்க வேண்டும்' என்று நினைத்துக்கொண்டிருந்தேன். 


ஆனால், அம்பயர் என்னை நிறுத்தியபோது, எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தது. புதிய வாழ்க்கை கிடைத்ததுபோல உணர்ந்தேன். முக்கியமாக, அந்த பால் நோ-பாலாக இருக்கும் பட்சத்தில், இது என்னுடைய நாள் என்று முடிவு எடுத்துக்கொண்டேன்" என்று கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!