வெளியிடப்பட்ட நேரம்: 06:13 (27/06/2017)

கடைசி தொடர்பு:06:54 (27/06/2017)

பிராவோ வீட்டில் விருந்து... இந்திய அணி வீரர்கள் பங்கேற்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு, விருந்து வைத்து உபசரித்துள்ளார் அந்நாட்டு வீரர் பிராவோ.

பிராவோ தோனி

சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் பாகிஸ்தானிடம் கோப்பையை நழுவவிட்ட இந்திய அணி, தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 5 ஒரு நாள் போட்டிகள், 1 டி-20 போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது. 2 ஒரு நாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் தோனி, விராட் கோலி, ரஹானே, ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பிராவோ. ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி வந்த பிரவோவுக்கும் தோனிக்கும் நெருக்கமான நட்பு நீடித்து வருகிறது. இதுகுறித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ள பிராவோ, தோனியை தனது உடன்பிறவா சகோதரர் என்று கூறியுள்ளார்.