ஐந்து வருட ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸருக்கு இவ்ளோ பணமா?

சீன மொபைல் நிறுவனமான விவோ, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டித் தொடரின் டைட்டில் ஸ்பான்ஸர் உரிமையைப் பெற்றுள்ளது. இதற்காக அந்த நிறுவனம், 2,199 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. 


ஒவ்வொர் ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும். கடந்த மே மாதத்தில் 10-வது ஐபிஎல் தொடர் நடந்து முடிந்தது. இந்தத் தொடரை விவோ நிறுவனம் ஸ்பான்ஸர் செய்தது. இந்த நிலையில், அடுத்த ஐந்து வருடத்துக்கான டைட்டில் ஸ்பான்ஸரை மீண்டும் விவோ நிறுவனம் பெற்றுள்ளது. இதற்காக அந்த நிறுவனம், 2,199 கோடி ரூபாய் செலவிடுகிறது. இது கடந்த வருடத்தை ஒப்பிடும்போது, 554 சதவிகிதத்தில் அதிகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் நடைபெறும் ஐபிஎல் தொடர்குறித்து இன்னும் பல குழப்பங்கள் தீராமல் உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்த தொடரில் அனைத்து வீரர்களும் ஏலத்தில் விடப்படுவார்களா, குஜராத் மற்றும் புனே அணியின் எதிர்காலம், தடை முடிந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளின் நிலை என்ன என்பதுகுறித்த எந்த அறிவிப்புகளும் இதுவரை வெளியாகவில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!