இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரியும் போட்டியா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ரவி சாஸ்திரி, தற்போது அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க உள்ளதாகத் தகவல் வந்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே, கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகப் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டும் அதை மறுத்துவிட்டார். இதையடுத்து, தற்சமயம் இந்திய அணிக்குப் பயிற்சியாளர்கள் யாரும் இல்லாத நிலையுள்ளது. அனில் கும்ப்ளே விலகலுக்குப் பிறகு, பிசிசிஐ, பயிற்சியாளாராக விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருந்தது. இதையடுத்து டாம் மூடி, வீரேந்திர சேவாக் உள்ளிட்டோரும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் ரவி சாஸ்திரியும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ரவி சாஸ்திரி, கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி, ரவி சாஸ்திரிக்கு ஆதரவாகச் செயல்படுவார் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!