வெளியிடப்பட்ட நேரம்: 00:15 (28/06/2017)

கடைசி தொடர்பு:10:43 (28/06/2017)

'கோலி- கும்ப்ளே மோதல் சரியாகக் கையாளப்படவில்லை!'- கங்குலி ஓப்பன் டாக்

'கோலிக்கும் கும்ப்ளேவுக்கும் இடையில் நிலவி வந்த பிரச்னை சரியாக கையாளப்படவில்லை' என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கூறியுள்ளார்.

சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலிக்கும், அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவுக்கும் இடையே பல மாதங்களாக மோதல் நிலவி வந்துள்ளது. இதையடுத்து கும்ப்ளே, தனது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதையும் பொருட்படுத்தாமல் பயிற்சியாளர் பதவியை சில நாள்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தார். கும்ப்ளே ராஜினாமா செய்த பின்னர்தான் கோலியுடனான சச்சரவு குறித்து இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, 'விராட் கோலிக்கும் அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவுக்கும் இடையில் இருந்த மோதல் இன்னும் சரியாக கையாளப்பட்டிருக்க வேண்டும். அது சரியாக ஹேண்டில் செய்யப்படவில்லை.' என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.