தர வரிசைப் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறிய பும்ரா!

டி-20 போட்டிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தர வரிசைப் பட்டியலில், 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார், இந்திய பந்துவீச்சாளர் பும்ரா. 

bumrah

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளராக அசத்தி வருபவர், ஜஸ்பிரித் பும்ரா. ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக இவர் விளையாடிவருகிறார். கடைசிக் கட்ட ஓவர்களில் திறமையாகப் பந்து வீசி, பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில், இவர் வீசிய நோ பால் பரபரப்பைக் கிளப்பியது. இதை விமர்சித்து விளம்பரப் பலகைகள்கூட வைக்கப்பட்டன.

இதனிடையே, இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி-20 போட்டிகளுக்கான தர வரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில், பும்ரா 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர் இமாத் வாசிமும், 3-வது இடத்தில் தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிரும் உள்ளனர். பேட்டிங் தர வரிசைப் பட்டியலில், விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 2-வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் ஃபின்சும், 3-வது இடத்தில் நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சனும் உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!