லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த புதிய கமிட்டி: பிசிசிஐ அறிவிப்பு!

லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த ஏழு பேர் கொண்ட புதிய குழுவை பிசிசிஐ அமைத்துள்ளது.

பி.சி.சி.ஐ

2013-ம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகளின்போது நடந்த சூதாட்ட சர்ச்சைகளால், பிசிசிஐ சீர்கெட்டு உள்ளதாகப் பல தரப்புகளிலிருந்தும் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இதையொட்டி, பிசிசிஐ குழுவில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள லோதா தலைமையில் ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. பிசிசிஐ மூலம் லோதா குழு பிறப்பிக்கும் பரிந்துரைகளை மாவட்ட கிரிக்கெட் சங்கங்கள் நிறைவேற்ற வேண்டும் என முன்னதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது, லோதா குழுவின் பரிந்துரைகள் தாமதப்படுத்தப்படாமல் விரைவாக நிறைவேற்றப்படுவதற்காக, ஏழு பேர் கொண்ட புதிய குழுவை பிசிசிஐ நியமித்துள்ளது. ஐபிஎல் தலைவர் ராஜேஷ் சுக்லா தலைமையிலான இந்த புதிய குழுவில், பிசிசிஐ செயலாளர் அமிதாப் செளத்ரி, பொருளாளர் அனிருத் செளத்ரி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பிசிசிஐ-யின் முதல் கூட்டம், நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஏழு பேர் கொண்ட கமிட்டி அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில், லோதா குழுவின் பரிந்துரைகள் உடனடியாக அமல்படுத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!