வெளியிடப்பட்ட நேரம்: 14:54 (28/06/2017)

கடைசி தொடர்பு:14:00 (29/06/2017)

நெதர்லாந்தில் மோடியைச் சந்தித்த சுரேஷ் ரெய்னா!

அரசு முறைப் பயணமாக நெதர்லாந்து சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியைக் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நேரில் சந்தித்தார். 


பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப் பயணமாக போர்ச்சுக்கல், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அமெரிக்காவிலிருந்து நேற்று நெதர்லாந்து சென்றிருந்தார். ஏற்கெனவே கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, அவரது மனைவி பிரியங்காவுடன் நெதர்லாந்து சென்றிருந்தார். அவர், தனது மனைவி பிரியங்காவுடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார். அந்தப் புகைப்படத்தை, அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில், 'கோல்டன் விஷன்' கொண்ட மனிதர் நரேந்திர மோடியைச் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.