வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (28/06/2017)

கடைசி தொடர்பு:14:13 (29/06/2017)

சர்வதேச ஜூனியர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்!

சர்வதேச ஜூனியர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் எட்டு பதக்கங்களுடன் இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

துப்பாக்கிச்சுடுதல்

ஐஎஸ்எஸ்எப் எனப்படும் சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் ஃபெடரேஷன், சர்வதேச அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டியை ஜெர்மனியில் நடத்தி வருகிறது. இப்போட்டி, ஜெர்மனியின் முக்கிய நகரமான சூல் நகரில் ஜூன் மாதம் 22-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஜூனியர் துப்பாக்கிச்சுடுதல் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.

ஜூன் 29-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் இப்போட்டியில் இதுவரை இந்திய ஜூனியர் அணி எட்டு பதக்கங்கள் வென்றுள்ளது. இதில் மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, மூன்று வெண்கலம் அடங்கும். இந்தப் பதக்கப் பட்டியலில் 25 மீட்டர் பிஸ்டல் ஷூட்டிங் போட்டியில் ஒற்றையர் பிரிவிலும், குழு பிரிவிலும் ஆண்கள் அணி தங்கப் பதக்கமும், பெண்கள் அணி வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளது. 

போட்டித் தொடரில் 21 பதக்கங்களுடன் சீனா முதலிடம் பிடித்துள்ளது. இந்த 21 பதக்கங்களுள் ஒன்பது தங்கப் பதக்கங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.