வெளியிடப்பட்ட நேரம்: 17:51 (28/06/2017)

கடைசி தொடர்பு:18:06 (28/06/2017)

21 வயதில் மிஸ் வேர்ல்டு பட்டம்... பாடி பில்டிங்கில் அசத்திய பெண் பாகுபலி!

உலக பாடி பில்டிங் போட்டி இத்தாலியில் நடைபெற்றது. உலகம் முழுவதிலுமிருந்து 50-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர். இந்திய அணி தரப்பில் உத்தரகாண்டைச் சேர்ந்த பூமிகா ஷர்மா என்ற பெண் கலந்துகொண்டார். போட்டியின் அனைத்து ரவுண்டுகளிலும் அசால்டாக புள்ளிகளை அள்ளினார் பூமிகா. இதனால், பாடி பில்டிங்கில் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றுள்ளார்.

Bhumika Sharma


இந்தப் படத்தை வெல்லும் முதல் இந்தியப் பெண் பூமிகாதான். கிட்டதட்ட WWE-இல் கலந்துகொள்பவர்கள்போல கட்டுமஸ்தான உடலைக் கொண்டுள்ள அவருக்கு 21 வயதுதான். ஆரம்பத்தில் பெற்றோர்கள் வற்புறுத்தல் காரணமாக, துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் பூமிகா. ஆனால், அவருக்குப் பாடி பில்டிங்கில்தான் விருப்பம்.

Bhumika


இதனால், பாடி பில்டிங்கில் பங்குபெற்று பட்டத்தையும் தட்டிச் சென்றுள்ளார். பூமிகாவுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. வெற்றி குறித்து பூமிகாவிடம் கேட்டபோது, "அனைத்து ரவுண்ட்களிலும் போதுமான அளவுக்குப் புள்ளிகளைப் பெற்றதால், நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளேன். அடுத்ததாக டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்குத் தயாராகி வருகிறேன்" என்று கூறியுள்ளார்.