'ஐபிஎல் போட்டிகளில் நன்றாக விளையாடினால் இந்திய அணியில் இடம் கிடைத்துவிடாது!'- ஏங்கும் சஞ்சு சாம்சன்

ஐபிஎல் 10-வது சீசனில் டெல்லி அணிக்காக விளையாடி அசத்தியவர் சஞ்சு சாம்சன். தற்போது, இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதற்காக போராடிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர், 'ஐபிஎல் போட்டிகளில் நன்றாக விளையாடுவதால் மட்டும் இந்திய அணியில் இடம் கிடைத்துவிடும் என்று சொல்வதற்கில்லை' என்று ஓபன் டாக் கொடுத்துள்ளார். 

சஞ்சு சாம்சன்

இதுகுறித்து அவர் மேலும், 'சென்ற ஆண்டு என் ஃபிட்னஸ் லெவல் கொஞ்சம் குறைவாக இருந்தது. ஐபிஎல் போட்டிகளின்போது நிறைய பயணம் இருக்கும். இதனால், என் உடல் மிகவும் பாதிக்கப்பட்டது. அழுத்தம் நிறைந்த தருணங்களில் என்னால் சரியாக விளையாட முடியவில்லை. ஆனால், இந்த முறை ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னரே என் ஃபிட்னஸில் கவனம் செலுத்தினேன். அதனால் நன்றாகவும் விளையாடினேன். என் அணியில் இருந்த டிராவிட்டும், நிறைய யோசனைகள் கொடுத்தார். அதுவும் விளையாடுவதற்கு உதவியாக இருந்தது. ஆனால், ஐபிஎல் போட்டிகளில் நன்றாக விளையாடுவதன் மூலம் மட்டும் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. நல்ல உடல் தகுதியுடன், உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக நன்றாக விளையாடினால் மட்டும்தான் இந்திய அணியில் விளையாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவோம் என்று நான் புரிந்துகொண்டேன்' என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!