வெளியிடப்பட்ட நேரம்: 04:40 (29/06/2017)

கடைசி தொடர்பு:07:48 (29/06/2017)

கான்ஃபெடரேஷன் கோப்பை கால்பந்து... போர்ச்சுக்கலை வீழ்த்தியது சிலி!

கான்ஃபெடரேஷன் கோப்பை கால்பந்துப் போட்டியில், இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது, சிலி அணி.

சிலி போர்ச்சுகல்

பல்வேறு கால்பந்துத் தொடர்களில் கோப்பையை வென்ற அணிகளுக்கிடையில், கான்ஃபெடரேஷன் கோப்பைக்கான கால்பந்துப் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடர், ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதில் போர்ச்சுக்கல், சிலி, ஜெர்மனி, மெக்ஸிகோ ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. இதையடுத்து, போர்ச்சுக்கல்-சிலி அணிகளுக்கு இடையில் முதல் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.

இதில், போர்ச்சுக்கல் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது, சிலி. ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. பெனால்டி சூட்டில் சிலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கலை வீழ்த்தியுள்ளது. பெனால்டியில் போர்ச்சுக்கல் அணி வீரர்கள் அடித்த 3 கோல்களையும் திறமையாகத் தடுத்து, சிலி அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார், அந்த அணியின் கோல் கீப்பர் க்ளாடியோ பிராவோ. இதையடுத்து, நாளை ஜெர்மனி-மெக்ஸிகோ அணிகளுக்கு இடையில் 2-வது அரையிறுதிப் போட்டி நடைபெற உள்ளது.