வைரல்: இங்கிலாந்து வீரர் குக்கின் மேஜிக் கேட்ச்!


இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன், குக். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்த அவர், ஓய்வு பெற்றுவிட்டார். இந்நிலையில், தற்போது அவர் 'Essex Cricket Country Club' என்ற அணிக்காக விளையாடிவருகிறார். இதனிடையே, அங்கு நடந்துவரும் போட்டிகுறித்து குக், செய்தியாளர் ஒருவருக்கு பேட்டியளித்தார்.

Cook


அந்த நேரத்தில், சக வீரர் ஒருவர் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார். குக்-செய்தியாளர் தீவிரமாக உரையாடி வந்த நேரத்தில், அங்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த வீரர் அடித்த பந்து, அந்தச் செய்தியாளரை நோக்கி ஜெட் வேகத்தில் வந்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்தப் பந்தை கேட்ச் பிடித்தார் குக்.

 


குக் பிடிக்கவில்லை என்றால், பறந்து வந்த பந்து செய்தியாளரைத் தாக்கியிருக்கும். தனது மேஜிக் கேட்ச் மூலம் செய்தியாளரைக் காப்பாற்றியுள்ளார் குக். இதையடுத்து, குக் கேட்ச் பிடித்த மேஜிக் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!