வெளியிடப்பட்ட நேரம்: 12:29 (29/06/2017)

கடைசி தொடர்பு:12:36 (29/06/2017)

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த கோயம்புத்தூர் இளைஞர்!

இங்கிலாந்தில் நடைபெற உள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு, கோயம்புத்தூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரை பிசிசிஐ தேர்வுசெய்துள்ளது. 


19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி, 2018-ம் ஆண்டு நியூஸிலாந்தில் நடைபெற உள்ளது. அதற்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு நடைபெற்றுவருகிறது. முன்னதாக, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இதில், கோயம்புத்தூரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ராதாகிருஷ்ணன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

ஜூனியர் கிரிக்கெட் அணியில், தென்னிந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி மாதம் மும்பையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், ராதாகிருஷ்ணன் சிறப்பாக விளையாடினார். அதையடுத்து, ஜூனியர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட், இங்கிலாந்து தொடருக்கு ராதாகிருஷ்ணனைத் தேர்ந்தெடுத்துள்ளார்.