வெளியிடப்பட்ட நேரம்: 14:23 (29/06/2017)

கடைசி தொடர்பு:14:23 (29/06/2017)

சென்னையில் புரோ கபடி லீக் இறுதிப்போட்டி

புரோ கபடி லீக் சீசன் -5 இறுதிப்போட்டி, வரும் அக்டோபர் 28-ம் தேதி சென்னையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புரோ கபடி

ஐபிஎல் போட்டிக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, ஹாக்கி, கபடி, கால்பந்து, பேட்மின்டன் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் லீக் போட்டிகள் தொடங்கப்பட்டன.  2014-ம் ஆண்டு புரோ கபடி லீக் தொடங்கப்பட்டது. தற்போது 2017-ம் ஆண்டுக்கான புரோ கபடி லீக் சீசன் 5, வெகு விமரிசையாகத் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று மும்பையில் வெளியிடப்பட்டது.

ஜூலை 28-ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டிகள், அக்டோபர் 28-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பிரிவுகளின் கீழ் நடத்தப்படவிருக்கும் போட்டிகளில், ’ஏ’ பிரிவில் டெல்லி, ஜெய்ப்பூர், மும்பை, ஹரியானா, குஜராத் அணிகளும், ‘பி’ பிரிவில் தமிழகம், மேற்கு வங்கம், பெங்களூரு, பாட்னா, ஆந்திரா, உத்தரப்பிரதேச அணிகளும் போட்டியிடுகின்றன. 

இந்தப் போட்டிகளின் தொடக்க ஆட்டம், ஜூலை 28-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. சென்னையில், செப்டம்பர் 30-ம் தேதி ஒரு லீக் ஆட்டமும் அக்டோபர் 26-ம் தேதி எலிமினேட்டர்-2 ஆட்டமும், அக்டோபர் 28-ம் தேதி இறுதி ஆட்டமும் நடைபெற உள்ளது.