7 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்கிறது இலங்கை அணி!

பாகிஸ்தானில் நடக்கும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க,  இந்த ஆண்டு இறுதியில், இலங்கை அணி பாகிஸ்தான் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

srilanka tour pakistan

கடந்த 2009-ம் ஆண்டு, பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி வீரர்கள் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.  அதில், இலங்கை அணி வீரர்கள் சிலர் காயமடைந்ததோடு, காவல்துறையினர் ஆறு பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்வதை அநேக கிரிக்கெட் அணிகள் தவிர்த்தன. ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மட்டும் பாகிஸ்தான் சென்று விளையாடின.

இந்நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானில் நடக்கும் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி பங்கேற்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த ஒருவர் அந்நாட்டு பத்திரிகையில், "பாகிஸ்தானில் பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதால், இலங்கை அணி பாகிஸ்தானில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளது" என்று கூறியுள்ளார். சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் கோப்பையை வென்றதிலிருந்து, பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டிவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!