ஒரே வருடத்தில் இரண்டு ஐபிஎல்- பிசிசிஐ புதிய திட்டம்?

மினி ஐபிஎல் தொடர் நடத்துவது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றுவருவதாக, ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

Rajeev Shukla


இந்தியாவில், ஏப்ரல்-மே மாதத்தில் நடக்கும் ஐபிஎல் தொடர், உலகம் முழுவதும் அதிக வரவேற்பைப்  பெற்றது. இதில், முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும் அணிகள், செப்டம்பரில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் விளையாடுவது வழக்கம். ஆனால், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால், இரண்டு ஆண்டுக்கு முன்னர் இந்தத் தொடர் கைவிடப்பட்டது.


இதனால், தற்போது செப்டம்பர் மாதத்தில் 15  நாள்கள் இடைவெளி கிடைத்துள்ளதால், அதில் மினி ஐபிஎல் தொடர் ஒன்றை நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றுவருவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார். மேலும், இது குறித்துப் பேசிய  அவர், சாம்பியன்ஸ் கோப்பை டி20 தொடர் நடத்தப்படுவதில்லை என்பதால், அந்த நேரத்தில் வெளிநாடுகளில் மினி ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து ஆலோசித்துவருகிறோம். மினி ஐபிஎல் தொடரை நடத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொருத்தமான இடமாக தோன்றுவதாகவும் தெரிவித்தார்.


கடந்த ஆண்டே இதே போன்று மினி ஐபிஎல் தொடர் நடத்துவதற்கான ஆலோசனைகளை பிசிசிஐ மேற்கொண்டது. இருப்பினும் பல காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!