புதிய பயிற்சியாளர் தேர்வுகுறித்து கேப்டன் கோலி புதிய கருத்து!

'இந்திய அணியின் புதிய பயிற்சியாளரைத் தேர்வுசெய்யும் பணியை நிர்வாகம் பார்த்துகொள்ளும். ஒரு அணியாக எங்களது கருத்துகளை நிர்வாகம் கேட்டபோது அதைத் தெரிவித்துள்ளோம்' என்றார்.


சமீபத்தில், கேப்டன் கோலி மற்றும் அனில் கும்ப்ளே இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கும்ப்ளே தனது தலைமைப் பயிற்சியாளர் பதவியை ராஜினாமாசெய்தார். இதனால், இந்திய அணி தற்போது தலைமைப் பயிற்சியாளர் இல்லாமல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விளையாடிவருகிறது. பிசிசிஐ-யும் புதிய பயிற்சியாளரைத் தேர்வுசெய்யும் பணிகளை மேற்கொண்டுவருகிறது.  

இந்நிலையில், ஆன்டிகுவாவில் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் கோலியிடம்,  புதிய பயிற்சியாளர் தேர்வுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கோலி, "தனிப்பட்ட முறையில் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. ஆனால், ஒரு அணியாக எங்களின் கருத்தை அணி நிர்வாகம் கேட்டபோது அதை நாங்கள் தெரிவித்தோம். அதுதான் வழக்கமான நடைமுறை. அதுபோலத்தான் தற்போதும் நடைபெறுகிறது. நாங்கள் இங்கே தொடருக்காக வந்துள்ளோம். எங்கள் கவனம்  முழுவதும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெறுவதில்தான் உள்ளது. பயிற்சியாளர் தேர்வுகளை பிசிசிஐ கவனித்துக்கொள்ளும்" என்று கூறினார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!