வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (30/06/2017)

கடைசி தொடர்பு:13:40 (30/06/2017)

இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் காலிறுதியில் தோல்வி

அன்டல்யா ஓப்பன் டென்னிஸ் போட்டி, துருக்கி நாட்டில் நடந்துவருகிறது. நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில், ராம்குமார் ராமநாதன் தோல்வியடைந்தார். 

Ramkumar Ramanathan


புல்தரை ஆடுகளத்தில் நடக்கும் ஏடிபி அந்தஸ்து பெற்ற இந்தத் தொடரில், தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் எட்டாம் நிலை வீரரான டொமினிக் தீமை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில், டொமினிக் தீமை வென்று அனைவரது கவனத்தையும் பெற்றார். நேற்று, காலிறுதிச் சுற்றுகள் நடந்தன. அதில், ராம்குமார்  சைப்ரஸ் நாட்டின் மார்க்கஸ் பாக்டாதிசை எதிர்கொண்டார்.

இந்தப் போட்டியில், முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றியபோதும், அடுத்த இரு செட்களில் மார்க்கஸின் கையே ஓங்கியது. அடுத்த இரு செட்களை 3-6, 6-7  என்ற கணக்கில் இழந்து தோல்வியைத் தழுவினார், ராம்குமார் ராமநாதன். டென்னிஸ் தர வரிசையில், 222 -வது இடத்திலிருக்கும் அவர், 79 -வது இடத்திலிருக்கும் மார்க்கஸுக்கு மிகக் கடுமையான நெருக்கடிகொடுத்து தோல்வியடைந்தார்.