வெளியிடப்பட்ட நேரம்: 16:06 (30/06/2017)

கடைசி தொடர்பு:16:08 (30/06/2017)

போக்குவரத்து விதிமுறை மீறல்: வீனஸ் வில்லியம்ஸ் ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் பலி!

டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் ஏற்படுத்திய கார் விபத்தில் முதியவர் ஒருவர் மரணமடைந்ததால் பிரச்னை தீவிரமடைந்துள்ளது.

வீனஸ் வில்லியம்ஸ்

அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் ஏற்படுத்திய விபத்தால் கடும் சிக்கலில் சிக்கிக்கொண்டுள்ளார். கடந்த 9-ம் தேதி காரில் சென்றுகொண்டிருந்தபோது மற்றொரு காரில் மோதியுள்ளார். இந்த விபத்தில் மற்றொரு காரில் பயணித்த 74 வயது முதியவர் ஒருவர் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த முதியவர் தற்போது சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்துள்ளார்.

சிகிச்சைபெற்று வந்த முதியவர் மரணமடைந்துள்ளதால் வீனஸ் வில்லியம்ஸுக்கு பிரச்னை அதிகரித்துள்ளது. வீனஸ் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால்தான் விபத்து ஏற்பட்டது என ஃப்ளோரிடா போலீஸார் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை வீனஸ் வில்லியம்ஸ் தரப்பினர் முற்றிலுமாக மறுத்துள்ளனர். வீனஸ் சாலையில் செல்லும்போது சிவப்பு விளக்கை மதிக்காமல் சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.