ரொனால்டோ வீட்டுக்குப் புதுவரவு!

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு 7 வயதில் கிறிஸ்டியானா ஜூனியர் என்ற மகன் உள்ளான். கிறிஸ்டியானா ஜூனியரின் தாயார் யாரென்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. ரொனால்டோவின் முதல் மகனை அவரது தாயாரும் சகோதரியும்தான் வளர்த்தனர். இந்தநிலையில், ரொனால்டோவுக்கு கடந்த ஜூன் 8-ம் தேதி அமெரிக்காவில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இந்தக் குழந்தைகளின் தாயார் பெயரும் தெரிவிக்கப்படவில்லை. குழந்தைகளுக்கு இவா, மேட்டியோ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கான்ஃபடேரேஷன்ஸ் கோப்பைக் கால்பந்து தொடரில் ரொனால்டோ விளையாடிக்கொண்டிருந்த நிலையில், இரட்டைக் குழந்தைகள் முதன்முறையாக லிஸ்பனில் உள்ள ரொனால்டோவின் வீட்டுக்குக்கொண்டு வரப்பட்டன. இதற்கிடையே, கான்ஃபடரேஷன்ஸ் கோப்பை அரையிறுதியில் சிலி அணியிடம் போர்ச்சுகல் அணி டைபிரேக்கரில் 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. 

குழந்தைகளைப் பார்க்க ரொனால்டோ அனுமதி கேட்டதையடுத்து, போர்ச்சுகல் அணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் மூன்றாவது இடத்துக்கான பிளேஆஃப் சுற்றில் போர்ச்சுகல் அணியில் ரொனால்டோ இடம்பெற மாட்டார்.  லிஸ்பன் வந்த ரொனால்டோ தன் குழந்தைகளுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இந்தக் குழந்தைகளின் தாயார் அமெரிக்காவைச் சேர்ந்த வாடகைத் தாயாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!