வெளியிடப்பட்ட நேரம்: 23:23 (30/06/2017)

கடைசி தொடர்பு:09:05 (01/07/2017)

தோனி அதிரடி ஆட்டம்... 251 ரன்கள் குவித்தது இந்தியா!

இன்று, மேற்கிந்தியத் தீவுகளுடன் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில், முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் குவித்துள்ளது.

dhoni west indies tour

சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பாகிஸ்தானிடம் கோப்பையை நழுவவிட்ட இந்திய அணி, தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 5 ஒருநாள், 1 டி-20 போட்டிகொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. 2 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டி, மழையால் கைவிடப்பட்டது. இதனிடையே, இன்று ஆண்டிகுவாவில் 3-வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 72 ரன்களும், கடைசிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடிய தோனி 78 ரன்களும் குவித்தனர். கேதர் ஜாதவ் 26 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில்  கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும், ஹோல்டர் மற்றும் பிஷு தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இதையடுத்து 252 ரன்களை இலக்காகக்கொண்டு மேற்கிந்தியத் தீவுகள் களமிறங்க உள்ளது.