பெண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பை: இந்தியா- பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை! | Women's cricket Worldcup: India to meet Pakistan tomorrow

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (01/07/2017)

கடைசி தொடர்பு:20:15 (01/07/2017)

பெண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பை: இந்தியா- பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை!

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை இந்தியா, பாகிஸ்தான் அணியைச் சந்திக்கவுள்ளது.

பெண்கள் கிரிக்கெட்

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் 50 ஓவர் கொண்ட தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. ஜூன் மாதம் 24-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதுவரை நடந்த போட்டிகளில், முதலில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. அப்போட்டியில் இந்தியா தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து இந்திய அணி இரண்டாவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, பட்டியலில் முன்னிலை பெற்று வந்தது.

இந்நிலையில் இரண்டு வெற்றிகளுடன் நாளை பாகிஸ்தான் அணியைச் சந்திக்கிறது இந்தியா. முன்னதாக நடந்த போட்டிகளில் பாகிஸ்தான் அணி இரண்டு தோல்விகளைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.