'நான் ஒரு ஒயின் மாதிரி!'- இது தோனி பன்ச்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 'நான் ஒரு ஒயின் மாதிரி. காலம் போக போக சுவைகூடிக் கொண்டே போவேன்' என்று சிலாகித்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி

கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியதிலிருந்தே, அவரது ஃபார்ம் பற்றி தொடர்ச்சியான கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில் கெத்து கம்-பேக் கொடுத்துள்ளார். இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் ஒரு 20 ஓவர்கள் போட்டியை விளையாடி வருகிறது. நேற்றுடன் இதுவரை மூன்று ஒரு நாள் போட்டிகள் முடிந்துள்ளன. நேற்றைய போட்டியில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பவே தோனி கொஞ்சம் சீக்கிரமே  களத்துக்கு வந்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக தோனி, 78 ரன்கள் அடித்து களத்தில் கடைசி வரை நிலையாக நின்றார். இப்படி அசத்தலான கம்-பேக் கொடுத்தபின் செய்தியாளர்களைச் சந்தித்தார் தோனி.

அப்போது அவரது பேட்டிங் பற்றி கேள்வி எழுப்பியபோது, 'நான் ஒரு ஒயின் மாதிரி. காலம் போக போக சுவைகூடிக் கொண்டே போவேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிகபட்ச ரன்களை ஸ்கோர் செய்து வருகின்றனர். நேற்று வாய்ப்பு கிடைத்தபின் ரன் அடித்தது மகிழ்வளிக்கிறது. இந்தப் போட்டியில் எது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றால், ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இல்லாத போதும் நிலைத்து நின்று கடைசிவரை ஆடியதுதான்' என்று செம எனர்ஜியோடு தோனி பேசியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!