பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியா வர விசா!

இம்மாதம் நடைபெறவுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஸ் போட்டியில் பங்கேற்க, பாகிஸ்தான் தடகள வீரர்கள் 6 பேருக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தடகள வீரகளுக்கு விசா

இரு நாடுகளுக்கு இடையில் பிரச்னை நீடித்து வருவதால், பாகிஸ்தானில் இந்திய அணியோ, இந்தியாவில் பாகிஸ்தான் அணியோ விளையாடாமல் இருந்து வந்தன. மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடின. கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்த கொள்ள பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்கப்படவில்லை.

இதனிடையே ஆசிய தடகள சாம்பியன்ஸ் போட்டியில் பங்கேற்க 6 பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இருதினங்களில் அவர்கள் இந்தியா வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. இந்த மாதம் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை, ஆசிய தடகள சாம்பியன்ஸ் போட்டி நடைபெறுகிறது. 45 நாடுகளில் இருந்து 800க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியானது ஒடிசாவில் நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் சார்பில் 95 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!