வெளியிடப்பட்ட நேரம்: 05:08 (02/07/2017)

கடைசி தொடர்பு:05:08 (02/07/2017)

கான்ஃபெடரேஷன் கோப்பை கால்பந்து... இன்று இறுதிப்போட்டி!

இன்று கான்ஃபெடரேஷன் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதிப்போட்டியில் சிலி மற்றும் ஜெர்மனி ஆகிய அணிகள் மொதுகின்றன.

germany chile

பல்வேறு கால்பந்துத் தொடர்களில் கோப்பையை வென்ற அணிகளுக்கிடையில், கான்ஃபெடரேஷன் கோப்பைக்கான கால்பந்துப் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடர், ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. அரையிறுதி போட்டியில் சிலி அணி போர்ச்சுகலையும், ஜெர்மனி அணி மெக்சிகோவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்நிலையில் இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் சிலியும் ஜெர்மனியும் மோதுகின்றன. பலமான ஜெர்மனி அணியை வீழ்த்தும் முனைப்புடன் சிலி அணி களமிறங்குகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு தொடங்குகிறது. இதனிடையே அரையிறுதியில் தோற்ற போர்ச்சுகல் மற்றும் மெக்சிகோ அணிகள், 3-வது இடத்துக்கு மோதவுள்ளன. இந்த போட்டி மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.