வெளியிடப்பட்ட நேரம்: 09:11 (02/07/2017)

கடைசி தொடர்பு:09:11 (02/07/2017)

பெண்கள் உலகக்கோப்பை: இன்று பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா!

cricketer

ஐ.சி.சி பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணியுடன் மோத இருக்கிறது. பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 24-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. ஏற்கெனவே நடந்த இரு ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் என இரண்டு அணிகளையும் வீழ்த்திய இந்தியா புள்ளிப்பட்டியலிலும் முன்னிலை வகித்து வருகிறது. அதே நேரத்தில், தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் மண்ணைக் கவ்வியுள்ளது பாகிஸ்தான். 

இந்நிலையில், இன்று டெர்பியில் நடக்கும் லீக் போட்டியில், மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணி தரப்பில் பூனம் ராத், மந்தனா, மிதாலி ராஜ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்போட்டி இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.