வெளியிடப்பட்ட நேரம்: 22:57 (02/07/2017)

கடைசி தொடர்பு:14:02 (03/07/2017)

இந்தியாவுக்கு இலக்கு 190 ரன்கள்..! பாண்டியா, உமேஷ் யாதவ் பந்து வீச்சில் திணறிய மேற்கிந்திய தீவுகள் அணி..!

மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஈவின் லீவிஸூம், கெய்ல் ஹோப்பும் தலா 35 ரன்கள் எடுத்தனர். 


மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒரு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இன்று, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4-வது  போட்டி ஆண்டிகுவாப் பகுதியிலுள்ள சர் விவியன் ரிச்சர்ட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய லீவிஸூம், கெய்ல் ஹோப்பும் மிகவும் நிதானமாக ஆடினர். நிதானமாக ஆடிய அவர்கள், தலா 35 ரன்களை எடுத்தனர். இருப்பினும், அடுத்தடுத்து வந்த வீரர்கள் பாண்டியா மற்றும் உமேஷ் யாதவின் பந்து வீச்சில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர். 50 ஓவர் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை எடுத்தது. இந்திய அணி சார்பில் பாண்டியா மற்றும் உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணி 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கவுள்ளது.