வெளியிடப்பட்ட நேரம்: 02:53 (03/07/2017)

கடைசி தொடர்பு:10:17 (03/07/2017)

190 ரன்களை எடுக்க முடியாமல் சேஸிங்கில் தோற்றது இந்திய அணி.

இந்திய அணி,  வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறது. ஐந்து ஒருநாள் போட்டிகள்கொண்ட தொடரில், நேற்றைய தினம் நான்காவது ஒருநாள் போட்டி நடந்தது. ஏற்கெனவே, இரண்டு ஒருநாள் போட்டிகளை வென்றுவிட்டதால், இந்தப் போட்டியை வென்றால் தொடரை வெல்லலாம் எனும் முனைப்பில் களமிறங்கியது, கோலி அணி.  டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ், பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. 

இந்தியா தோல்வி

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில், பேட்ஸ்மேன்கள்  நிலைத்து நின்று பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து, 189 ரன்கள் எடுத்தது வெஸ்ட் இண்டீஸ். 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியால், வெறும் 178 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்தது, 11 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. அந்த அணியின் கேப்டன் ஹோல்டர்,  ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு வழி வகுத்தார்.