விளையாட்டு பள்ளிகளுக்கான சேர்க்கை தேதி அறிவிப்பு..!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 8 விளையாட்டு விடுதிகள், 2 சிறப்பு விளையாட்டு விடுதிகள் மற்றும் 5 முதன்மை நிலை விளையாட்டு விடுதிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்குத் தங்குமிட வசதிகள் மற்றும் சத்தான உணவுடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

கோப்புப்படம்

இந்த விடுதிகளில் வரும் 2017-18-ம் ஆண்டுக்கான 2-ம் கட்டச் சேர்க்கை  வரும் 5-ம் தேதி தொடங்கவுள்ளது. 7, 8,9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். தடகளம், கூடைப்பந்து, பாட்மிண்டன், நீச்சல் ஆகிய போட்டி பிரிவுகளில் மாணவர்களும், தடகளம், கால்பந்து, வளைகோல்பந்து, பாட்மிண்டன், நீச்சல், கூடைப்பந்து, வாலிபால், ஹாக்கி, கைப்பந்து, டேக்வோண்டா உள்ளிட்ட விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவிகளும், அதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு நடக்கும் அன்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் விளையாட்டில் பங்கேற்ற அசல் சான்றுகளுடன், 5-ம் தேதி, காலை 8 மணி அளவில் www.sadat.tn.gov.in இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள விளையாட்டு மைதானங்களில் நேரில் ஆஜராக வேண்டும் என திருச்சி விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!