வெளியிடப்பட்ட நேரம்: 09:55 (03/07/2017)

கடைசி தொடர்பு:09:55 (03/07/2017)

கான்ஃபெடரேஷன் கோப்பை - ஜெர்மனி வரலாற்று வெற்றி

கான்ஃபெடரேஷன் கோப்பை கால்பந்துத் தொடரின் இறுதி ஆட்டத்தில், சிலியை வீழ்த்தி பட்டத்தை வென்றது ஜெர்மனி.

Germany with  confederation cup


10-வது ஃபிஃபா கான்ஃபெடரேஷன் கோப்பை கால்பந்துத் தொடர், ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகரில் நடந்துவருகிறது. நேற்றிரவு நடந்த இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில், ஜெர்மனி-சிலி அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடந்த இந்த இறுதிப் போட்டியில், ஜெர்மனியின் லார்ஸ் ஸ்டின்டில், முதல்பாதியில் தனது அணிக்காக முதல் கோலை அடித்தார். அதன்பிறகு, இரண்டு அணிகளும் கடுமையாக முயற்சித்தும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
இதனால், ஜெர்மனி அணி 1-0 என்ற கணக்கில் சிலியை வென்று கோப்பையைக் கைப்பற்றியது. நான்கு முறை உலகச் சாம்பியனான ஜெர்மனி வெல்லும் முதல் கான்ஃபெடரேஷன் கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜெர்மனி அணி, வரலாற்றில் இடம்பிடித்துவிட்டதாக அந்த அணியின் பயற்சியாளர்  ஜோச்சிம் லோ தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக் கோப்பைத் தொடர் நடக்கவிருக்கும் நிலையில், தற்போதைய இளம் ஜெர்மனி அணியின் இந்த வெற்றி, அவர்களுக்குக் கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.