கங்குலியை முந்திய தோனி: இதுலயா முந்தணும் என ரசிகர்கள் வேதனை!

'ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், மிக அதிக பந்துகளை வீணடித்து எடுத்த அரை சதம்' என்ற பெருமையை கங்குலிக்கு அடுத்தபடியாகப் பெற்றிருக்கிறார் தோனி.

தோனி

ஆன்டிகுவாவில் நேற்று நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடியது இந்தியா. படுதோல்வியைச் சந்தித்த அணியின் முக்கிய பேட்ஸ்மேனாகக் கருதப்படும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அதிக பந்துகளை வீணடித்து, மிகவும் மெதுவாக அரை சதத்தைக் கடந்து கங்குலியின் சாதனையை முறியடித்தார். நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில், தோனி 108 பந்துகளில் அரை சதம் எடுத்துள்ளார். இந்த அரைசதத்துக்காக அவர் வீணடித்த பந்துகளின் எண்ணிக்கை 70.

இதேபோல, 2005-ம் ஆண்டு இந்தியா, இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்கேற்றபோது, 105 பந்துகளில் அரை சதம் எடுத்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி. 12 ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது கங்குலியின் சாதனையை தோனி முறியடித்துள்ளார். இதனால், 'இப்படியொரு சாதனையா' என ரசிகர்கள் வேதனை தெரிவித்து, சமூக வலைதளங்களில் கருத்து பதிவுசெய்துவருகின்றனர்.

ஆனால், இந்தச் சாதனைப் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பவர் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சடகோபன் ரமேஷ். 1999-ம் ஆண்டு கென்யாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், 116 பந்துகளில் அரை சதம் எடுத்தவர் சடகோபன் ரமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!