வெளியிடப்பட்ட நேரம்: 16:23 (04/07/2017)

கடைசி தொடர்பு:16:23 (04/07/2017)

டென்னிஸ் தரவரிசை: இந்தியாவின் நம்பர் 1 வீரரானார் தமிழகத்தின் ராம்குமார் ராமநாதன்!

சர்வதேச அளவிலான டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் நம்பர் 1 வீரராக முன்னேறியுள்ளார் தமிழகத்தின் ராம்குமார் ராமநாதன்.

டென்னிஸ்

ஏடிபி அந்தஸ்து பெற்ற அன்டல்யா ஓப்பன் டென்னிஸ் தொடரில், தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் எட்டாம் நிலை வீரரான டொமினிக் தீமை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில், டொமினிக் தீமை வென்று அனைவரது கவனத்தையும் பெற்றார். இதற்கு அடுத்து நடந்த காலிறுதிச் சுற்றில் எதிரணி வீரருக்கு இறுதி வரை கடும் நெருக்கடி கொடுத்து வந்த ராம்குமார், அப்போட்டியில் தோல்வியடைந்தார்.

இதைத்தொடர்ந்து, தோற்றாலும் சர்வதேச அளவில் அதிகப்படியாகப் பாராட்டப்பெற்றார் ராம்குமார். தற்போது, கடந்த திங்கள்கிழமை சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் 222-வது இடத்தில் இருந்த ராம்குமார், இந்தப் போட்டிக்குப் பின்னர் 57 புள்ளிகள் அதிகரித்து 295 புள்ளிகளுடன் 38 இடங்கள் முன்னேறி 184-வது இடம் பிடித்துள்ளார். இந்த ரேங்கிங் சர்வதேச அளவில் இந்திய வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் ராம்குமாருக்கு முதலிடத்தைப் பிடித்துத் தந்துள்ளது.