சாம்பியன்ஸ் ட்ராபி வென்று கொடுத்தவருக்கு கூடுதல் பொறுப்புகள்!

சாம்பியன்ஸ் ட்ராபியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃபராஸ் அகமதுக்கு டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

சர்ஃபராஸ் அகமத்

கடந்த சில வருடங்களாகவே அவுட் ஆஃப் ஃபார்மில் தவித்து வந்த பாகிஸ்தான் அணிக்கு புதிய உத்வேகமாக அமைந்துள்ளது சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றி. மிஸ்பாவுக்குப் பிறகு ஒரு நல்ல கேப்டன் நமக்கு வரமாட்டாரா என்று ஏங்கிக் கிடந்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பரிசாக கிடைத்துள்ளார் சர்ஃபராஸ் அகமத். கேப்டன் ஆன சில மாதங்களிலேயே சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை கைப்பற்றியது லேசான காரியம் அல்ல. அதுவும் பரம வைரியான இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்று கொடுத்துள்ளார் சர்ஃபராஸ். 

இந்நிலையில், ஒரு நாள் அணிக்கு மட்டும் கேப்டனாக இருந்த சர்ஃபராஸ், டெஸ்ட் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே டி-20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த சர்ஃபராஸ், இப்போது மூன்று தர போட்டிகளுக்கு கேப்டனாகி இருக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சேர்மன் வெளியிட்டுள்ளார். டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் தோனி தலைமையில் இந்திய அணி கலக்கியதுபோல, சர்ஃபராஸ் பாகிஸ்தானில் கலக்குவாரா என்பதை இனி வரும் போட்டிகளில்தான் தெரியும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!